இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கத்தி-கட்டுரை

 இந்த கத்தி இல்லைன்னா சமையலே கிடையாதுன்னு ஆயிருக்கு!  ஒரு முறை வீடு மாறி வந்தப்ப அரிவாள்மனையும் இல்லை! கத்தியும் இல்லை! கடையெல்லாம் பூட்டியாச்சு! சாமான் வந்த மூட்டையில் ஏதோ ஒண்ணுல இருக்கு! ஒரு பக்கம் கடைக்குரிய பொருட்கள்-அதில் விதவிதமான கத்திகள்,அரிவாள்மனைகள்,அரிவாள்கள் மறுபக்கம் வீட்டு சாமான்கள் வந்ததில் விருப்பப்பட்ட கத்திகள்(துடைப்பம் கிழிக்க ஒரு கத்தி,பழம் வெட்ட ஒரு கத்தி,ஹெண்ட்பேக்கில் கை காவலுக்கு ஒரு கத்தி, பேப்பர் சீவ ஒரு கத்தி, சமையல் பிளாஸ்டிக் கிழிக்க ஒரு கத்தி  என இஷ்டத்திற்கு பயன்படுத்திவிட்டு அவசரத்திற்கு இரவு உணவிற்கு இல்லையே என வீட்டில் இருந்தவர்களைக் கத்திவிட்டேன். பொறுமையாக எங்கள் வீட்டு கடைக்குட்டி எனது ஹேண்ட்பேக்கில் வைத்திருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து எல்லோருக்கும் பழம் வெட்டினாள். இண்டக்ஷன் ஸ்டவ் கிடைத்ததில் குக்கர் வைத்து காய்,மசாலா வெட்டிப் போட்டாள். அரை மணி நேரத்தில் பத்து பேரும் சாப்பிட்டோம். எங்க வீட்டு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் மனிதர்கள் போலத்தான். அதற்கும் உயிர் உண்டு. அதனால் கத்தி,அரிவாள் இவற்றுடன் இதற்கும் ஆயுத பூஜை வழிபாடு நடத்துவோம...
 கண் சரியாகத் தெரியலை! இதுல எங்கே போய் களை பறிக்கிறது! புள்ளை பள்ளிக்கூடம் போயிருக்குது! வந்தா சாப்பாடு கேட்கும்! என்று கணவன் வீரபத்திரனைக் கடிந்தாள் முருகாயி. வயித்துப்புள்ளைக்காரியா இருக்கேன்னு கை நீட்டாமல் இருக்கேன். கட்சிக்காரன் ஊர்வலத்துக்கு தலைக்கு 500 தர்றதா சொல்லியிருக்கான். அதுக்காகக் காத்திட்டு இருக்கேன். உனக்கு வேணும்னா எவன்கிட்டேயாவது போய்ட்டு வந்துடு! காதில் கேட்கமுடியாதபடி வசவுகளை அள்ளி வீசியபடி மது பாட்டிலை வீசி எறிந்தபடி சென்ற கணவனை உற்றுப் பார்த்தபடி இருந்தாள் முருகாயி. மித்ரபட்டினத்தில் குப்பைகள் இருந்தாலாவது குப்பை பொறுக்கி பிள்ளையைப் படிக்க வைக்கலாம். விவசாய இடத்துல கர்ப்பிணியாக இருக்கேன்னு வேற ஒதுக்கி வைக்கிறான். கெஞ்சிக்கூத்தாடி வேலை வாங்கி செய்யலாம்னா கண் சரியாகத் தெரியலை! கண்டாக்டர் கண்ணாடிக்கே இரண்டாயிரம் பில் போடுகிறார். இந்த மித்ர பட்டினத்தில் எப்படி எம்புள்ளையைக் கரை சேர்க்கப்போகிறேனோ கடவுளே! என மாரியாத்தாவிற்கு எட்டணாவை முடிந்து வைத்தாள். காற்று வேகமாக வீசுது! காத்து கருப்பு மாதிரி தெரியுது! இந்தா புள்ளை முருகாயி! உள்ளே போ! உனக்கு தேவையான காய்கறிகளை ...
                                 ஜாலியான உணவுத் திருவிழா-தமிழகம்ஆகஸ்ட்-2022 ஒரே வீட்டில் டென்ஷனாக இருக்கவே மதியத்திற்கு மேல் உணவுத்திருவிழா பார்க்கக் கிளம்பினோம். வண்டி நிறுத்த என்று ஒதுக்கப்பட்ட இடம் கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் உள்ளே செல்ல வேண்டியிருந்தது. அதையும் தாண்டி நடந்து சென்று உணவுக் கூடம் செல்ல வேண்டியிருந்தது. தமிழக ஸ்பெஷாலிட்டியே இந்த மக்கள்தாம்பா! வானில் பெயர் தெரியாத பறவைகள் சூரிய அஸ்தமனத்தில் பறந்தபடி இருந்தன. பொதுவாக பொங்கலுக்குத்தான் இப்படி களை கட்டும். ஆனால் இந்த உணவுத் திருவிழாவைக்காண மக்கள் கூட்டம் சிறுவர்,பெரியவர் என வித்தியாசம் இல்லாமல் வந்ததைக் காண ஆச்சரியமாக இருந்தது. அந்த உணவுத்திருவிழா மண்டபத்தில் டெண்ட் அடித்ததைப்போல கொட்டகைதான்! ஆனாலும் மக்கள் வேகமாக வாங்கி உண்பதைக் கண்டபோது இதுபோல இன்னமும் நிறைய உணவுத் திருவிழா நடந்தால் என்ன என்று தோன்றியது. காவல்துறை பல ஏற்பாடுகளைச் செய்த போதிலும் அவர்கள் கட்டுப்பாட்டை மீறி மக்கள் கூட்டம் விரும்பியதை வாங்கி உண்டது. அருகில் சாக்...
                                         இந்தியச் சுதந்திர தினம்-2022 செந்நீர் கலந்த மண்ணில் இன்று  மதச் சாக்கடைகளைச் சுத்தம் செய்ய ஆளின்றி இருப்பதை வெள்ளைப்புறாக்கள் வேதனையுடன்  பார்த்தபடி கண்ணீர் வடிக்கின்றன! காந்தி படத்தை மௌனமாக பார்த்தபடி பட்டொளி வீசுகின்ற சுதந்திரக் கொடிக்கு மூவண்ண பலூன்கள் உயரப் பறந்தபடி வீர வணக்கம் செய்கின்றன! எங்கள் நாட்டில் ஆயிரம் மதங்கள் இருந்தாலும் அன்னியர் வரவை விரும்போம் என்றபடி உயர வளர்ந்த  வேம்பு ஆல் அரச மரங்கள் கைகோர்த்தபடி 75 ஆவது சுதந்திர நாளை மகிழ்வுடன் கொண்டாடுகின்றன!
 இந்த சாதி வெறி மனிதனை ஆட்டுவதை நான் என் வாழ்நாளில் சந்தித்துள்ளேன். ஒரு மனிதன் தனது திறமையின்மையை அனைத்து பணத்தையும் இழந்தான். மனைவியை வெளியே அனுப்பி காட்சிப் பொருளாக்கினான். மனைவி ஒருநாள் அவனை விட்டுப் பிரிந்தாள். கோணலான மன நெஞ்சம் கொண்டவன் தன்னை மறந்து அவள்மேல் கை வைக்க செருப்பாலேயே அடித்தாள்அவனது தாயே இறங்கியிருந்தாள். மேலும் அவனது செயல்கள் அவளை அருவெறுப்படையச் செய்தது. முடிவில் அவள் என்ன ஆனாள். வாசகர்கள் கதை தொடர்ச்சியாக எழுதலாம்