கண் சரியாகத் தெரியலை! இதுல எங்கே போய் களை பறிக்கிறது! புள்ளை பள்ளிக்கூடம் போயிருக்குது! வந்தா சாப்பாடு கேட்கும்! என்று கணவன் வீரபத்திரனைக் கடிந்தாள் முருகாயி.

வயித்துப்புள்ளைக்காரியா இருக்கேன்னு கை நீட்டாமல் இருக்கேன். கட்சிக்காரன் ஊர்வலத்துக்கு தலைக்கு 500 தர்றதா சொல்லியிருக்கான். அதுக்காகக் காத்திட்டு இருக்கேன். உனக்கு வேணும்னா எவன்கிட்டேயாவது போய்ட்டு வந்துடு! காதில் கேட்கமுடியாதபடி வசவுகளை அள்ளி வீசியபடி மது பாட்டிலை வீசி எறிந்தபடி சென்ற கணவனை உற்றுப் பார்த்தபடி இருந்தாள் முருகாயி.

மித்ரபட்டினத்தில் குப்பைகள் இருந்தாலாவது குப்பை பொறுக்கி பிள்ளையைப் படிக்க வைக்கலாம். விவசாய இடத்துல கர்ப்பிணியாக இருக்கேன்னு வேற ஒதுக்கி வைக்கிறான். கெஞ்சிக்கூத்தாடி வேலை வாங்கி செய்யலாம்னா கண் சரியாகத் தெரியலை! கண்டாக்டர் கண்ணாடிக்கே இரண்டாயிரம் பில் போடுகிறார். இந்த மித்ர பட்டினத்தில் எப்படி எம்புள்ளையைக் கரை சேர்க்கப்போகிறேனோ கடவுளே! என மாரியாத்தாவிற்கு எட்டணாவை முடிந்து வைத்தாள்.

காற்று வேகமாக வீசுது! காத்து கருப்பு மாதிரி தெரியுது! இந்தா புள்ளை முருகாயி! உள்ளே போ! உனக்கு தேவையான காய்கறிகளை நான் சமைத்து எடுத்து வர்றேன் என்று பக்கத்து வீட்டு இட்லிக்கடை ஆயா கமலாம்பிகை கூறினாள்.

அக்கா! உன்னை மாதிரி நாலெழுத்து நான் படிச்சிருந்தேன்னா இன்னைக்கு இப்படி என் புருஷன்கிட்டே சீரழிய வேண்டாமே! எங்க ஆத்தா எட்டு வயசுல ஒரு பெரிய குடும்பத்துல என்னைக் கொண்டுபோய் சோறு மட்டும் போட்டு ஒழுக்கத்தைக் கத்துக் கொடுன்னு சொல்லிட்டாங்க! அவுங்க போட்டுக் கழிச்ச மிச்ச மீதி துணியைத்தான்,சோத்தைத்தான் நான் தின்னு வளர்ந்தேன். தோட்டவேலை முதல் துணி தைக்கிற வேலை வரைக்கும் செய்வேங்கா! எங்காவது வேலை வாங்கிக் கொடுங்களேன்!

உன் திறமையை நீதான் வெளிக்காட்டணும்! உன் வயித்துல இருக்கிற புள்ளை உன் புருஷனுடையது தானா!

தீயை மிதித்ததுபோல முருகாயி கண்கள் சிவக்க கமலாம்பிகையைப் பார்த்தாள்.

என்ன அப்படிப் பார்க்கிறே! நேற்று ராவுக்கு உன் புருஷன் என் வீட்டுக்கு வந்து மீன் குழம்பு சோறு வேணும்னு கேட்டான். கொஞ்சநேரம் அப்படியே படுத்துக் கிடந்தான் என்று இழுத்தபடி சொன்ன கமலாம்பிகையை வெட்டி சாய்ப்பதுபோல முருகாயி பார்த்தாள். 

                                                பூ ஒன்று புயலானது-தொடர்கதை வாசகர்கள் படிக்க இந்த தளத்திற்குச் செல்லுங்களேன்

https://tamil.momspresso.com/parenting/admin/addablogpost?edit=true&article-id=article-555a661818a64d98b22b0f9a8d56ae19

எட்டு மாசமா இருக்கே! சும்மா சொல்லக்கூடாது! உன் புருஷன் அழகு அள்ளுதும்மா!

ஏண்டி! எடுபட்ட நாயே! உன் உடம்பு சொரிஞ்சுக்க என் புருஷனா கிடைச்சான்!

நீ யார்கிட்டேயோ போய் புள்ளை வரம் வாங்கியிருக்கே அப்படின்னு உன் புருஷன் போதையில நேற்று பினாத்துனான்....தெரியுமா!

களை பறிக்கப் போன இடத்துல உன்னைக் கவுத்திட்டாங்களாம். 

ஆத்தா கமலா! உன்கிட்டே வாங்கிச் சாப்பிட்டால்கூட என் வயித்துப் புள்ளைக்கும், என் புள்ளைக்கும் நோவு வரும்.

பெரிய பத்தினி மாதிரி பேசுறியே! என் புள்ளை களை பறிக்கிறவ புள்ளை மாதிரியா போவுது! பெரிய மல்டி ஓனர் பொண்ணு மாதிரியில்ல போவுது! யாருக்காவது டெய்லி அனுப்பி வைக்கிறியா என்ன!

கையில் முறமும், துடப்பமும் இருந்ததை வைத்து கமலாம்பிகையை அடிக்கத் தொடங்கினாள் முருகாயி.

இடுப்பில் ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்தாது தொடர்ந்து அவளை அடித்தாள்.

கால்வழியே ரத்தம் ஒழுகத் தொடங்கியது. மயங்கியபடியே சரிந்த முருகாயியை அந்த நேரம் வந்த மகள் கனிஷ்கா அம்மாவைத் தாங்கினாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

https://storymirror.com/read/poem/tamil/oim2m0hc/pukaiyillaa-pooki/detail