வியக்க வைத்த தி ஹிந்து சமையல் போட்டி
வியக்க வைத்த தி ஹிந்து சமையல் போட்டி ஜூன் 18இல் நான் பார்த்த நிகழ்வு என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரு விளம்பரத்திற்கு இவ்வளவு சக்தி இருக்குமா? தினமலர், தினமணி நடத்திய சமையல் போட்டியை விட தி ஹிந்து நடத்திய சமையல் போட்டிக்குக் கூட்டம் அதிக அளவில் இருந்தது அதிக அளவில் அசைவம் இடம் பெற்றிருந்தன. கை மறைத்து ஜாக்கெட் போடவேண்டும் என்பதை அறியாத ஸ்லீவ்லெஸ் ரிசப்ஷன் பெண்கள் அழகாக இருந்தனர். வந்திருந்த அனைவரிடமும் அன்பாகப் பேசி வழிகாட்டினர். அதனால்தான் கூட்டம் அதிகமாக இருந்திருக்குமோ! என நினைக்க வைத்தது. பரிசுத்தொகை அதிகம் என்பதால் உயர்தட்டு குடிமக்களும் ஆவலுடன் கலந்து கொள்ள வந்திருந்தனர். சாதாரணமாக ஒரு ரவுண்டு, இரண்டாவது ரவுண்டு என முடிந்து விடும். ஆனால், 3 மணிக்கு மேலாகியும் ரிசல்ட் வரவில்லை. கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். மறுநாள் நாளிதழில் வெற்றிபெற்றவர் பெயர் வந்திருந்தது. 202 பேர் கலந்து கொண்ட போட்டியில் ஒரு குடும்பத்திற்கு 4 பேர் என வந்திருந்தனர். குழந்தைகளுடன் வந்திருந்த அவர்கள் உணவும் எடுத்து வந்த...