வியக்க வைத்த தி ஹிந்து சமையல் போட்டி
வியக்க வைத்த தி ஹிந்து சமையல் போட்டி
ஜூன் 18இல் நான் பார்த்த நிகழ்வு என்னை ஆச்சரியப்படுத்தியது.
ஒரு விளம்பரத்திற்கு இவ்வளவு சக்தி இருக்குமா?
தினமலர், தினமணி நடத்திய சமையல் போட்டியை விட தி ஹிந்து நடத்திய
சமையல் போட்டிக்குக் கூட்டம் அதிக அளவில் இருந்தது
அதிக அளவில் அசைவம் இடம் பெற்றிருந்தன. கை மறைத்து ஜாக்கெட்
போடவேண்டும் என்பதை அறியாத ஸ்லீவ்லெஸ் ரிசப்ஷன் பெண்கள் அழகாக இருந்தனர். வந்திருந்த
அனைவரிடமும் அன்பாகப் பேசி வழிகாட்டினர். அதனால்தான் கூட்டம் அதிகமாக இருந்திருக்குமோ!
என நினைக்க வைத்தது.
பரிசுத்தொகை அதிகம் என்பதால் உயர்தட்டு குடிமக்களும் ஆவலுடன்
கலந்து கொள்ள வந்திருந்தனர். சாதாரணமாக ஒரு ரவுண்டு, இரண்டாவது ரவுண்டு என முடிந்து
விடும். ஆனால், 3 மணிக்கு மேலாகியும் ரிசல்ட் வரவில்லை. கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்
வழங்கினர். மறுநாள் நாளிதழில் வெற்றிபெற்றவர் பெயர் வந்திருந்தது. 202 பேர் கலந்து
கொண்ட போட்டியில் ஒரு குடும்பத்திற்கு 4 பேர் என வந்திருந்தனர். குழந்தைகளுடன் வந்திருந்த
அவர்கள் உணவும் எடுத்து வந்திருக்கவேண்டும். நேரம் ஆன காரணத்தினால் குழந்தைகள் சாப்பிடாமல்
காத்திருந்தனர். அம்மா ஹைட் அண்ட்சீக் விளையாடுங்க என வழிகாட்டிக் கொண்டிருந்த நகைச்சுவைக்காட்சிகளும்
இடம்பெற்றன. பேசாமல் தீவுத்திடல் போன்ற மைதானத்தைப் பிடித்திருக்கலாம் என்று தோன்றியது.
ஒரே ரவுண்டில் முடிந்திருக்கும் இல்லையா? பார்வையாளர்கள் யார் என்ன செய்தார்கள் என்று
பார்க்க முடியவில்லை. மேலும் பாஸ்தா மெயின் என சொல்லியிருந்தனர். ஆனால் பாஸ்தா ஆன்லைனில்தான்
நாகா பிராண்ட் கிடைத்தது. இதுபோல ரவா,மைதா மட்டும்தான் கடையில் இருந்தன. சில கடைகளில்
கேழ்வரகு மாவு இருந்தது. நான் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி செய்தேன். எல்லோராலும்
முடியுமா?
பாஸ்தா உடலுக்குக் கெடுதல் தரும். நான் செய்த கருப்பட்டி
இளநீர் பழ கேசரி, இளநீர் பாஸ்தா புலாவ். அங்கு பிரசண்ட் செய்திருந்தவர்களைப் பார்த்தபோது
மயக்கமே வந்து விட்டது. அவ்வளவு நான்வெஜ் ஐட்டம்.
பன்னிரண்டு வயதில் இருந்து எழுபது வயதிற்குட்பட்ட பெண்கள்
கலந்து கொண்டிருந்தனர். ஒரு வருத்தம். சரியாகப் பேச முடியவில்லை. ஒரு சேவரிட் சேமியா
பாக்கெட், மதுரம் அரிசி பாக்கெட்,தண்ணீர் பாட்டில்-1,ஊதுவத்தி ஒன்று எனக் கொடுத்திருந்தனர்.
இந்த மதுரம் அரிசி மார்க்கெட்டில் இல்லை. சென்னையில் ஹோல்சேல் மளிகை மெயின் ஏரியா வடபழனிதான்.
அங்கேயே இந்த பொருட்கள் சரிவர இல்லை என்றால் மக்கள் எங்கு பொருட்களை வாங்கி வந்து செய்வார்கள்.
ஆர்கேஜி நெய் என போட்டிருந்தனர். கொரானா காலம் என்பதால் நாம் கேட்பது நமது பர்சுக்கு
உகந்தது கிடைக்கவில்லை. ஜிபிஆர் என ஒரு நெய் கிடைத்தது. பார்த்தால் பிசுக்! பிசுக்தான்.
வெறுத்துப்போய் இதயம் நல்லெண்ணெய் போட்டுச் செய்து விட்டேன். மனுஷன் தாமு கரெக்டாகச்
சொல்லிவிட்டார். நெய் குறைவு என்று! வருங்காலத்தில் பெண்கள் அதுவும் வேலைக்குப் போகும்
பெண்கள் கணவனுடன் வந்து சமைப்பார்கள் என நம்பவேண்டும். எனது கணவரே வாருங்கள் என்று
சொன்னபோது கூச்சப்பட்டு வர மறுத்துவிட்டார். ஆனால் அங்கு ஆண்கள் வந்திருந்தனர். ஆண்
சமைக்கும் உணவிற்கு பாராட்டுகள் அங்கு அதிகம் குவிகின்றது. சொன்னால் ஆண் சமுதாயம் ஏற்குமா
என்ன!
வாணி-மின்னிதழ் ஆசிரியர்
கருத்துகள்
கருத்துரையிடுக