ஆசிரியர்களே அறிவோமா! நான் பலவிதமான மனிதர்களை எனது வாழ்க்கையில் தினமும் சந்தித்து வருகிறேன். தொடர்ச்சியாகப் பணிகள் இருக்கும் காரணத்தினால் ஆன்லைனில் மாணவர்கள் கற்பதுபோக ஆஃப்லைனிலும் மாணவர்களுக்கு பாடம் தமிழ்,மற்றும் பிற பாடங்களையும் எடுத்து வருகிறேன். வயிற்றுக்குச் சோறிட்ட ஆசிரியர் பணியை நான் என்றுமே மறந்தது கிடையாது. அப்படி பார்த்தபோது கடந்த ஒரு வருடத்தில் டேப்லட்,ஐபேட் வழி கற்பித்தல் பணி எளிமையாக இருந்தாலும் மாணவர்களிடம் அதைத் தர இயலவில்லை. எளிதாக இருமல்,காய்ச்சல் அவர்களிடம் இருந்தது. ஏசி,குளிர்பானங்கள்,நாவிற்குச் சுவை தரும் பலவிதமான இனிப்புகள் என எவற்றையும் அவர்களால் விட இயலவில்லை. இந்நிலையில் எலக்ட்ரானிக் பொருட்களை அவர்கள் பயன்படுத்துவதால் அவர்களுக்கு உடல்நிலை பாதித்ததைக் காண நேர்ந்தது. மறதி அதிகம் குழந்தைகளிடம் இருப்பதால் டீச்சிங்எய்ட் அந்த மாணவர்களுக்குடைய கற்றல் திறனுக்குத் தகுந்தவற்றைத் தயாரித்து மாணவர்களின் கற்பித்தல் திறனை வளர்க்கவேண்டு...
இடுகைகள்
நவம்பர் 8, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வாணி மின்னிதழ் வருடத்திற்கு ஒன்றாக மலர்ந்து வருகிறது. ஆசிரியராகிய எனக்கு சென்னையிலும் தமிழ்நாட்டில் பிற இடங்களிலும் கிடைக்கின்ற அனுபவங்கள் ஒவ்வொன்றும் புதுவிதமாக இருக்கின்றன. ஒரு ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது கொரானாவிற்குப் பிறகு மாணவர்களிடம் மாறுபாடுகள் தெரிவதாகக் கருத்து தெரிவித்திருந்தார். நான் ஒரு டெஸ்டிற்காக ஒரு பள்ளியில் ஒரு நாள் இருக்க நேர்ந்தது. அப்போது ஆசிரியர் கூறிய வார்த்தைகளை உணர்ந்தேன். தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஃபீஸ் கட்டியும்,கட்டாமலும் சேர்த்து விட்டு பெற்றோர்கள் இடம் மாறியபடியே இடத்திற்குத் தகுந்தாற்போல வாழப் பழகி வருகின்றனர். இந்நிலையில் .து மழைக்காலமாக இருப்பதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியதாக இருக்கிறது. பொதுவாக சென்னை என்பது இரண்டுங்கெட்டான் தட்பவெப்பமாக இருக்கும். மதுரை பக்கமும்,திருநெல்வேலி பக்கமும் இ ருந்து வருபவர்களுக்கு கழிவுநீர் கால்வாய்முதல் பழைய சோறு தின்பதுவரை எல்லாவற்றிலுமே மாற்றமாகத்தான் இருக்கும். மெட்ரோ டிரெயினுக்கும், பஸ்சுக்கும், சுவையான உணவகங்கள் டிவியில் விளம்பரம் பார்த்தும் விவசாயத்தைத் தொலைத்துவிட்டு நகர்ப்புறங்களில் வந்த...