ஆசிரியர்களே அறிவோமா!
நான் பலவிதமான மனிதர்களை எனது வாழ்க்கையில் தினமும் சந்தித்து வருகிறேன். தொடர்ச்சியாகப் பணிகள் இருக்கும் காரணத்தினால் ஆன்லைனில் மாணவர்கள் கற்பதுபோக ஆஃப்லைனிலும் மாணவர்களுக்கு பாடம் தமிழ்,மற்றும் பிற பாடங்களையும் எடுத்து வருகிறேன். வயிற்றுக்குச் சோறிட்ட ஆசிரியர் பணியை நான் என்றுமே மறந்தது கிடையாது. அப்படி பார்த்தபோது கடந்த ஒரு வருடத்தில் டேப்லட்,ஐபேட் வழி கற்பித்தல் பணி எளிமையாக இருந்தாலும் மாணவர்களிடம் அதைத் தர இயலவில்லை. எளிதாக இருமல்,காய்ச்சல் அவர்களிடம் இருந்தது. ஏசி,குளிர்பானங்கள்,நாவிற்குச் சுவை தரும் பலவிதமான இனிப்புகள் என எவற்றையும் அவர்களால் விட இயலவில்லை. இந்நிலையில் எலக்ட்ரானிக் பொருட்களை அவர்கள் பயன்படுத்துவதால் அவர்களுக்கு உடல்நிலை பாதித்ததைக் காண நேர்ந்தது.
மறதி அதிகம் குழந்தைகளிடம் இருப்பதால் டீச்சிங்எய்ட் அந்த மாணவர்களுக்குடைய கற்றல் திறனுக்குத் தகுந்தவற்றைத் தயாரித்து மாணவர்களின் கற்பித்தல் திறனை வளர்க்கவேண்டும்.
கடையில் இப்போதெல்லாம் சிப்ஸ், பால் ஐட்டம் எனக் கண்ணைப் பறிக்கும் உணவு வகைகள் நிறைய வந்து விட்டன. அவற்றில் கெமிக்கல் நிறைய கலந்துள்ளன. கேரட்,பழம் எனக் கலந்து விட்டோம் எனக் கூறி மக்களை ஏமாற்றும் கம்பெனிகள் அதிகம் முளைத்துவிட்டன. அதனால் பெற்றோர் கவனித்து பொருட்களை வாங்கித் தரவேண்டும்.
ஒரு கடையில் இன்னமும் ஃபுட்கலர் விற்பதற்கே அனுமதி தரவில்லை என்கிறார். ஆனால் சிப்ஸ்,ஓமப்பொடி கடையில் கலர்கலராக பூந்தி விற்கிறார்கள். எப்படி இந்த வண்ணங்கள் அவர்களுக்குக் கிடைத்தது எனப் புரியவில்லை. இது தவிர உணவகங்களில் பலவிதமான இனிப்புகள் வராதிருக்க ஸ்ப்ரே பயன்படுத்துகிறார்கள். புதுஆட்கள் கிராமப்புறங்களில் இருந்து ஆங்கிலம் தெரியாமல் வருகின்றனர். அதனால் அதன்மேல் எழுதியிருக்கும் வாசகங்களை அவர்களால் படிக்க முடியவில்லை. சாப்பாடும்,தங்க இருப்பிடமும் தந்து சிறு அளவு பணம் கொடுத்தால் போதும் என நகர்ப்புறங்களுக்கு வந்து விடுகின்றனர். இது கன்ஸ்யூமர்களுக்குத் தொல்லைதான். நேற்று சென்னையில் ஒரு பொருளை ரிட்டர்ன் செய்வதற்காகச் சென்றிருந்தேன். விலை சிறு கடையில் விற்பதை விட அதிகமான விலையில் தரமற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும்,பாத்திரங்களும் கொட்டிக் கிடந்தன. இவர்களை யார்தான் தட்டிக் கேட்பது? எனப் புரியவில்லை. தனி மனித ஒழுக்கம் என்பது வியாபாரத்தில் இருக்கவேண்டும் என்பது ஏன் புரியவில்லை. பெரும்பான்மையான மால்களில் வாங்கினால்தான் பெருமை என ஏசி கடைகளில் சென்று மக்கள் வாங்குகின்றனர். ஆனால் காய்கறிகளும், பழங்களும் வீட்டிற்குச் சென்றபின் பார்த்தால் வெளியில் விற்கப்படும் காய்கறிகளை விட விரைவில் அழுகிப்போய் விடுகின்றன. மேலும் அவ்விதைகளை முளைக்க வைத்தாலும் முளைப்பதில்லை. அரசு கடைகளிலேயே விதைகள் ஒரு பாக்கெட் இருபது ரூபாய் விற்கப்படுகிறது. அதற்கு காய்கறிக்கடைகளில் மீதியான விதைகளைச் சேமித்து மக்கள் பயன்படுத்தினால் காய்கறிகளுக்கு அலைகின்ற வேலை மிஞ்சும். நம் தோட்டத்திலேயே தயாரானது என்ற பெருமை மிஞ்சும். எனது வீட்டில் வந்த புதிதில் தொட்டிகளை வரிசையாக வைத்திருந்தேன். ஒரு நாள் மழை பலமாகப் பெய்தது. பக்கத்து வீட்டில் பெயிண்ட் அடித்திருந்தார்கள். உடனே இரு நாட்களுக்கெல்லாம் செடிகள் வாடி விட்டன. பின்னர் அவற்றை இடம் மாற்றி வைத்தேன். பெயிண்ட் நீர் பட்டால்கூட செடிகள் வாடி விட்டதை நினைக்கும்போது வருத்தமாக இருந்தது. சென்னை வாழ்மக்கள் செடி வைக்க எங்கேதான் போவார்கள்.. அதுவும் காய்கறிகள் கழுவிய நீரை இப்போதெல்லாம் ஊற்ற முடியவில்லை. கார்ப்பரேஷன் தண்ணீர் ஊற்றித்தான் எனது தொட்டிச் செடிகளை வளர்த்து வருகிறேன். மணித்தக்காளி,கற்பூரவல்லி,கீழாநெல்லி,சங்கு,கற்றாழை,பிரண்டை,நெய்தக்காளி, வெண்டை,குருிவித்தலை பாகல் என பலதும் உள்ளன. காரணம் அவசரத்திற்கு கடைக்கு ஓட முடியாத நிலை இருக்கும் போதெல்லாம் இரண்டு இலை எடுக்க ஆகுமே! மக்கள் ஆர்கானிக் என பேசிக்கொண்டேயிருந்தால் பயன் கிடையாது. ஆசிரியர்கள் பாடத்துடன் நடைமுறைக் கல்வியையும் சேர்த்துக் கற்றுக் கொடுத்தால் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடலாம் அல்லவா!
கருத்துகள்
கருத்துரையிடுக