இடுகைகள்

ஜூன் 14, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மலேசியப் பயண அனுபவம்

https://tamil.pratilipi.com/read/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-lzaqfndxqycl-i6550f33q1n9899
உறவுகள் மரங்கள் தாளமிட சூரியன் வாழ்த்தொளி பாட சிறியாநங்கையுடன் போர்க்கோலம் பூண்டபடி சுக்குகாபியைத் துணை வீரனாக்கி வெங்காயத் தேரைச் சாரதியாக்கி வேப்பிலை கலந்த மஞ்சள் சங்கை வெற்றிச் சங்காக்கி உரசியே கிராம்பு பட்டை திப்பிலி கடுக்காய் படைக்கலன்களை நீராக்கி ஏழைகளுக்கு துணையாக தெருவெங்கும் தெளித்துவிட்டு எண்ணெய் கலந்த வைரிகளை ஒதுக்கிய தீமையில்லாத சாதி மதமற்ற நல்மனிதன் உலகெங்கிலும் வெள்ளைப் புறா கொடி பறக்கவிட்டு கரோனா பேயை ஓட ஓட விரட்டினானே! https://storymirror.com/read/poem/tamil/asfpb820/urrvukll

தோல்விகள் உனக்கேது https://storymirror.com/read/story/tamil/c4xv2kf3/toolvikll-unnnkkeetu

தோல்விகள் உனக்கேது வாழ்க்கைப் பாதை இவ்வளவு கடினமாக இருக்கும் என கஙகா நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அப்பா சக்திக்குமீறி படிக்கவைத்து திருமணம் செய்தே பாதி கடனாளியாக நிற்பதை எண்ணி கலங்கினாள். மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறாள் என்றதும் மாமியார் உடனே திருமணத்திற்கு சம்மதித்ததும் நினைவுக்கு வந்தது. இப்போ குழந்தை பிறந்ததால் தொடர்ச்சியாக வேலைக்குப் போக முடியவில்லை. கடனுக்கு வாங்கி வைத்த தவணை வீடு பயமுறுததியது. அம்மா! அம்மா! என குழந்தை கட்டிலில் இருந்து கூப்பிட ஓடி வந்து தூக்கினாள். பணம் இல்லை என்றதும் பாகற்காய் முகம் காட்டிய கணவன் ரவீந்தரை நினைத்து மனம் கசங்கியது. அடுத்த குழந்தை இனி வேண்டாம்..நீ அதுக்கும் லீவு போட்டுட்டு வீட்டில் இருந்து விடுவாய் என்றதும் அவளது ஆண்குழந்தை கனவு சுக்குநூறாகியது. அப்புறம் எதுக்கு ஒரே பெட்டில் படுக்கணும் என வெறுப்பைக் கொட்டினாள். உடனே லேப்டாப்பில் வேறு இடம் வேலை தேடிச் சென்ற கணவனை நினைத்து அழுவதா! சிரிப்பதா! என வருந்தினாள். அப்பாவிடம் சொல்லிவிடலாம் எனப் பலமுறை நினைத்து அவர் நிம்மதியைக் கெடுக்கவேண்டாம் என மௌனமானாள். தான் சம்பாதித்த பணத்தில் எ...