வாணி மின்னிதழ் தூதுவளை தொக்கு சளி தொந்தரவுகளால் பெரியவர் முதல் குழந்தைகள்வரை அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு நிறைய பேருக்கு சளி நிரந்தரமாக இருக்கிறது. அவர்களுக்கான குறிப்புதான் இது. தூதுவளை இலை ஒரு பிடி கறிவேப்பிலை ஒரு பிடி சிறிய வெங்காயம் இருபது தேங்காய் துருவல் ஒரு பிடி உளுந்து ஒரு தேக்கரண்டி இஞ்சி ஒரு துண்டு பூண்டு 2 பல் நெல்லிக்காய் ஒன்று வதக்க எண்ணெய் சிறிதளவு எல்லாவற்றையும் நன்றாக கழுவி வதக்கவும். உளுந்தை சிவக்க வருமாறு வறுத்தெடுத்து அதனுடன் சேர்க்கவும். நன்றாக வதங்கியபின் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பெருங்காயத்தூள்,மிளகுப்பொடி போட்டு தாளித்து மிக்சியில் அரைத்த விழுதைக் கொட்டி கட்டியானவுடன் இறக்கவும். சப்பாத்தி,பூரி,இட்லி,தோசை போன்றவற்றிற்கு ஏற்றது.
இடுகைகள்
பிப்ரவரி 23, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது