மழையே! மழையே! வானம் வரையறையின்றி இந்த இடம்தான் பெய்வேன் எனக் கணக்கெடுத்துப் பெய்வது கிடையாது. நான் இருக்கும் வீடு தரை தளம். மழை ஐப்பசி மாதம் என்பதால் பெய்கிறது. ஆனால் கழிவுநீர் கால்வாய் வசதி சரிவர இல்லை.ஃப்ளாட்வாசிகள் இருக்கும் இடத்தில்தான் அதிகமாக இந்த பிரச்னைகள் வருகின்றன. எனது வீட்டின் அருகில் சாலையிலேயே மணல்,கல் கொட்டி வியாபாரம் பார்த்து வருகிறார். மழையில் அத்தனையும் கரைந்து பாதாள சாக்கடையில் தான் செல்கிறது. இத்தனைக்கும் அது வெள்ளை மணல். எனக்கே அது ஆச்சரியமாக இருந்தது. அதெல்லாம் போய் சாக்கடையை அடைக்காதா! மண்ணிற்குள்தான் கழிவுநீர் குழாயுடன் குடிதண்ணீர் குழாயும் அருகில் அமைக்கப்பட்டிருக்கும். பத்துநாளா குழாயில் சாக்கடை நீர்தான் வருகிறது. நல்லவேளை! டிரம்மில் மழை நீர் இருப்பதால் நீர் பிரச்னை இல்லை. ஆனால் முன்போல மழைநீர் இல்லை என்றே தோன்றியது. சோப் போட்ட கையைக் கழுவினால் பிசுபிசுவென ஒட்டிக்கொள்ளும். ஆனால் இம்முறை அவ்வாறு இல்லை. வேளச்சேரி வழியாக பறக்கும் டிரெயின் என பேசப்பட்ட டிரெயினில் சென்ட்ரல் முதல் சேப்பாக்கம் வரை பயணம் செய்ய நேரிட்டது. மழைக்காலங்களில் செல்லும் வேலைக்குச் செல்லா...
இடுகைகள்
நவம்பர் 13, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது