மழையே! மழையே!

வானம் வரையறையின்றி இந்த இடம்தான் பெய்வேன் எனக் கணக்கெடுத்துப் பெய்வது கிடையாது. நான் இருக்கும் வீடு தரை தளம். மழை ஐப்பசி மாதம் என்பதால் பெய்கிறது. ஆனால் கழிவுநீர் கால்வாய் வசதி சரிவர இல்லை.ஃப்ளாட்வாசிகள் இருக்கும் இடத்தில்தான் அதிகமாக இந்த பிரச்னைகள் வருகின்றன.  எனது வீட்டின் அருகில் சாலையிலேயே மணல்,கல் கொட்டி வியாபாரம் பார்த்து வருகிறார். மழையில் அத்தனையும் கரைந்து பாதாள சாக்கடையில் தான் செல்கிறது. இத்தனைக்கும் அது வெள்ளை மணல். எனக்கே அது ஆச்சரியமாக இருந்தது. அதெல்லாம் போய் சாக்கடையை அடைக்காதா! மண்ணிற்குள்தான் கழிவுநீர் குழாயுடன் குடிதண்ணீர் குழாயும் அருகில் அமைக்கப்பட்டிருக்கும். பத்துநாளா குழாயில் சாக்கடை நீர்தான் வருகிறது. நல்லவேளை! டிரம்மில் மழை நீர் இருப்பதால் நீர் பிரச்னை இல்லை. ஆனால் முன்போல மழைநீர் இல்லை என்றே தோன்றியது. சோப் போட்ட கையைக் கழுவினால் பிசுபிசுவென ஒட்டிக்கொள்ளும். ஆனால் இம்முறை அவ்வாறு இல்லை. வேளச்சேரி வழியாக பறக்கும் டிரெயின் என பேசப்பட்ட டிரெயினில் சென்ட்ரல் முதல் சேப்பாக்கம் வரை பயணம் செய்ய நேரிட்டது. மழைக்காலங்களில் செல்லும் வேலைக்குச் செல்லாமல் இருக்க முடியுமா! பத்து வருடங்களுக்கு முன் பிரமாண்டமாகப் பேசப்பட்ட அந்த ரயில்வே ஸ்டேஷனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? உள்ளே நுழைந்தாலே நாற்றம் குடலைப் பிடுங்குகிறது. பராமரிப்பில்லாத நிலை காணப்படுகிறது. கல்வி என்பது விடுமுறை நாட்களில் மாணவர்களிடமும் போய்ச் சேரவேண்டும் என்ற பொறுப்பு பெற்றோர் தலையில் அமர்ந்துள்ளது. அதனால் நிறைய இடங்களில் பெற்றோர் தனிப்பட்ட ஆசிரியர்களை நியமித்து வருகின்றனர். மெட்ரோவும் இன்னமும் பத்து வருடம் கழித்து இப்படித்தான் மாறிப்போகும். மக்களுக்கு தனது இந்தியா என்ற பொறுப்பு இருக்கவேண்டும். மழை பெய்து கொண்டே இருக்கிறது. பஸ் நடத்துநரே குப்பையைக் கிழித்து படிக்கட்டின் வழியாக வீசி எறிகிறார். சுற்றுப்புறத்தைக்காக்க கடுமையான சட்டங்கள் அமைக்க வேண்டும். மெட்ரோவிற்காக அமைக்கப்படும் வசதிகள் ஏன் சென்னையிலேயே அமைக்க வேண்டும் என்பது புரியவில்லை.  ஏற்கனவே எலக்டிரிக் டிரெயின்,பஸ் என வசதிகள் நிறைய உள்ளன. அடிப்படை வசதிகள்கூட இல்லாத எத்தனையோ நகரங்களுக்கு இந்த வசதிகள் போய்ச் சேரலாமே! அரசு அலுவலகங்களையும், தனியார் பெரிய அலுவலகங்களையும் தமிழ்நாட்டின் பிற இடங்களுக்கும் மாற்றம் செய்தாலே சென்னையில் வாழும் மக்கள்தொகை குறையுமே!

 விதவிதமாக உடை உடுத்தி பெண்கள் விடுதியில் தங்கி பணி செய்கின்றனர். அவர்களை ஈர்க்கும் வகையில் ஷாப்பிங் மால்களை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கி வருகின்றனர். இது சென்னைதானா! அல்லது ஏதோ வெளிநாட்டிற்கு வந்துவிட்டோமா என எண்ண வைக்கும் அளவு இருக்கிறது. இலேசா மழை விட்டதும் அரசு இலவசமாக பேருந்து வசதி அளிக்கிறது எனத் தெரிந்தும் சிறு வயதுப் பெண்கள் அட்ரஸ் தெரியாமல் நடத்துநரிடம் கேட்டு ஊர் சுற்றச் செல்கின்றனர். இதற்காகவா அரசு இலவசமாக பேருந்து வசதி அளிக்க வேண்டும். சென்ற வருடம் ஒரு பஸ்சில் பயணம் செய்தபோது பஸ் என்றாலே என்னவென்று தெரியாத கூலி வேலை செய்யும் குடும்பம் சன்னல் பக்கமாக அமர்ந்து ரசித்தபடி பயணம் செய்தது. பின்னர் பஸ்சிலேயே அமர்ந்து கொண்டு வந்த உணவுகளை நீட்டியபடி சந்தோஷமாக சாப்பிட்டனர். அதை டிரைவரும் பார்த்தபடி மௌனமாக இருந்தார். 

என்னடா! ஒரு மின்னிதழ் ஆசிரியராக இருந்து சாதாரண விஷயத்தை எழுதறாங்கன்னு வாசகர்கள் யோசிக்கலாம்!  இது சென்னை மக்களின் தண்ணீர் பிரச்னை. வருடாவருடம் இதே பிரச்னை என்றால் என்ன பொருள்?இது அரசியல் பற்றி எழுதும்  மின்னிதழ் அல்ல! குழந்தைகள், மாணவர்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட பெண்களுக்கான இதழ். 

குடும்பம் என்பது பெண்கள்,குழந்தைகள் இவர்களால் மட்டுமே அமைக்கப்படுகிறது என சராசரி மக்கள் நினைக்கின்றனர். ஆனால் இப்போது பெண்கள் வேலைக்குப் போனபிறகு தனியாக வாழும் பெண்கள் அதிகரித்துள்ளனர். பாரதி,பாரதிதாசன்,கவிமணி இதற்காகவா பெண்கல்வி வேண்டும் எனப் பாடினார்கள் என நினைக்கத் தோன்றுகிறது?!!!

பத்துநாள் மழை பெய்தால்தான் ஏரி,குளம் நிரம்பும். அந்த அளவு சென்னையில் மக்கள் தொகை அதிகம். இந்த இடத்தில் வாழும் மக்கள் பொறுப்புடன் நடக்க வேண்டாமா! கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் சாலிகிராமம் வரை ஒரு வேலையாகச் சென்றிருந்தேன். போன வருடமும் டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் செல்ல நேர்ந்தது. அப்போதிருந்தமாதிரியே இப்போதும் தண்ணீர்! தண்ணீர்தான். வானளாவிய கட்டிடங்கள் சூழ்ந்த இடத்தில் வெண்கலச் சிலையாக காமராசர் சிலையாக இருந்தார் இந்த தண்ணீரை என்ன செய்வது என யோசிக்கிறாரோ! மெட்ரோ வேலை நடப்பதால் தண்ணீர் அம்மா உணவகம் இருக்கும் இடத்தில் வழிந்தோடி அசிங்கமாகக் கிடந்தது. அந்த தெரு முழுக்க சினிமாகாரர்கள் ஆதிக்கம்தான். ஒரு லாரி மண் இறக்கி அடித்தாலே நீர் தேங்காது. ஆனால் யாரும் அதைச் செய்யவில்லை.  எங்க ஊர் கிராமம் இருக்கிறது. ஃபோன் நம்பர் போட்டாலே கிராமத்துத் தலையாரியையும், ஊர்த் தலைவரையும் லைனுக்கு வருவார்கள். ஆனால் சென்னையில் அப்படி கிடையாது. வார்டு தலைவர் ஒவ்வொரு வீடாக வந்து தண்ணீர் தேங்கி நிற்கிறதா எனக் கேட்க வேண்டாமா? 

குழந்தைகள்  பள்ளி செல்வதை விடுத்து வீட்டில் எத்தனை நாள் அமர்ந்திருக்கவேண்டும்!!! நாங்கள் பள்ளி செல்லும்போதெல்லாம் மழை பெய்துகொண்டேதான் இருக்கும். பள்ளி இயங்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் அன்று இவ்வளவு ஃப்ளாட் கிடையாது. ஃப்ளாட் கட்டி வருபவர்கள் விதிமுறையின்படி வீடு கட்டி வருகின்றனர் என நினைத்தீர்களா வாசகர்களே! துருப்பிடித்த கம்பிகள், மட்டமான பொருட்கள் வைத்து உருவாக்கப்பட்ட ஃப்ளாட்கள் தான் இருக்கின்றன. இயற்கைச் சீரழிவு வரும் என 2004இலேயே எச்சரிக்கப்பட்ட பகுதிதான் சென்னை. இருந்தும் பொறுப்பில்லாமல் வாழும் மக்களை என்னவென்று சொல்வது!! மழையும் விடாமல் பெய்கிறது. அப்படியே சாலையில் சிறுநீர் கழித்தபடி இருக்கிறார்கள். அந்த தண்ணீர்தானே வீட்டிற்குள் வருகிறது!!!

அப்படியே பொடி நடையாக வடபழனி பஸ்ஸ்டேண்ட் வந்தேன். வழியில் அடிபட்ட காலுக்கு டுவீல் ஆசாமி ரத்தம் சொட்டிய விரலுக்கு துணி கட்டிக் கொண்டிருந்தார். வருங்கால மெட்ரோவிற்காக மக்கள் இன்னமும் எத்தனை வருடம் தொல்லைபடவேண்டும் என்பது புரியவில்லை. ஆனால் இன்று பாண்டிபசார் முதல் மௌண்ட்ரோடுவரை பயணிக்க நேர்ந்தது. சாலை சுத்தமாகப் பளிங்குபோல குப்பையின்றி காய்ந்து போயிருந்தது. வழி நெடுக கழிவு நகராட்சி ஆட்கள் வண்டியுடன் இருந்தனர். பத்திரிகைகள் எல்லா இடத்திற்கும் சென்று செய்தி சேகரிக்கவேண்டும் என அப்போதுதான் புரிந்துகொண்டேன். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

https://storymirror.com/read/poem/tamil/oim2m0hc/pukaiyillaa-pooki/detail