வாணி மின்னிதழ் வருடத்திற்கு ஒன்றாக மலர்ந்து வருகிறது. 

ஆசிரியராகிய எனக்கு சென்னையிலும் தமிழ்நாட்டில் பிற இடங்களிலும் கிடைக்கின்ற அனுபவங்கள் ஒவ்வொன்றும் புதுவிதமாக இருக்கின்றன. ஒரு ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது கொரானாவிற்குப் பிறகு மாணவர்களிடம் மாறுபாடுகள் தெரிவதாகக் கருத்து தெரிவித்திருந்தார். நான் ஒரு டெஸ்டிற்காக ஒரு பள்ளியில் ஒரு நாள் இருக்க நேர்ந்தது. அப்போது ஆசிரியர் கூறிய வார்த்தைகளை உணர்ந்தேன். 

தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஃபீஸ் கட்டியும்,கட்டாமலும் சேர்த்து விட்டு பெற்றோர்கள் இடம் மாறியபடியே இடத்திற்குத் தகுந்தாற்போல வாழப் பழகி வருகின்றனர். இந்நிலையில் .து மழைக்காலமாக இருப்பதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியதாக இருக்கிறது. பொதுவாக சென்னை என்பது இரண்டுங்கெட்டான் தட்பவெப்பமாக இருக்கும். மதுரை பக்கமும்,திருநெல்வேலி பக்கமும் இ ருந்து வருபவர்களுக்கு கழிவுநீர் கால்வாய்முதல் பழைய சோறு தின்பதுவரை எல்லாவற்றிலுமே மாற்றமாகத்தான் இருக்கும். மெட்ரோ டிரெயினுக்கும், பஸ்சுக்கும், சுவையான உணவகங்கள் டிவியில் விளம்பரம் பார்த்தும் விவசாயத்தைத் தொலைத்துவிட்டு நகர்ப்புறங்களில் வந்து செட்டிலாகி விடுகின்றனர். தினமும் பயணிக்கும் எனக்கு கிராமவாசிகளின் மாறுபட்ட செயல் வருத்தமளிக்கிறது. சிறுநீர் கழிக்க சாலையைப் பயன்படுத்தினால்  கழிவு நீரகற்றும் பணியில் இறங்கி எப்படி வேலை செய்யமுடியும்? சிறு மழைக்கே தண்ணீர் தேங்குகிறது என்றால் என்ன பொருள்? வீட்டில் பயன்படுத்தும் கண்ணாடி,பிளாஸ்டிக், மண்பொருட்கள் என அனைத்தையும்  ஊர்பக்கம் இருப்பதுபோல கழிவு நீர்க்கால்வாயில் தள்ளி விட்டால் நீர் எப்படி போகும்? வேலை செய்யும் ஆட்களை ஊர்ப்புறங்களில் இருந்து கொண்டு வந்து வேலை செய்ய வைக்கிறார்கள். மண்,குப்பை போகாத அளவு தடுப்புகள் போடவில்லை. நுங்கம்பாக்கத்தில் ஒரு இடத்தில் டிராபிக் போலிஸ்காரரே குப்பை எடுத்துப் போடும் அளவு உள்ளது. இதையெல்லாம் மக்கள் கணக்கில் கொண்டு வரும் மழைக்காலத்தை மக்கள் கையாண்டால் மழைநீர் பூமிக்குள் போகும். தனது வீட்டுச் செலவுக்காக அடுத்தவர்களிடம் இலஞ்சம் வாங்கினால் நமது வீடும் நீரில் மிதக்கும்  என்பதை யார் உணர்வார்!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

https://storymirror.com/read/poem/tamil/oim2m0hc/pukaiyillaa-pooki/detail