கத்தி-கட்டுரை
இந்த கத்தி இல்லைன்னா சமையலே கிடையாதுன்னு ஆயிருக்கு!
ஒரு முறை வீடு மாறி வந்தப்ப அரிவாள்மனையும் இல்லை! கத்தியும் இல்லை! கடையெல்லாம் பூட்டியாச்சு! சாமான் வந்த மூட்டையில் ஏதோ ஒண்ணுல இருக்கு! ஒரு பக்கம் கடைக்குரிய பொருட்கள்-அதில் விதவிதமான கத்திகள்,அரிவாள்மனைகள்,அரிவாள்கள் மறுபக்கம் வீட்டு சாமான்கள் வந்ததில் விருப்பப்பட்ட கத்திகள்(துடைப்பம் கிழிக்க ஒரு கத்தி,பழம் வெட்ட ஒரு கத்தி,ஹெண்ட்பேக்கில் கை காவலுக்கு ஒரு கத்தி, பேப்பர் சீவ ஒரு கத்தி, சமையல் பிளாஸ்டிக் கிழிக்க ஒரு கத்தி என இஷ்டத்திற்கு பயன்படுத்திவிட்டு அவசரத்திற்கு இரவு உணவிற்கு இல்லையே என வீட்டில் இருந்தவர்களைக் கத்திவிட்டேன். பொறுமையாக எங்கள் வீட்டு கடைக்குட்டி எனது ஹேண்ட்பேக்கில் வைத்திருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து எல்லோருக்கும் பழம் வெட்டினாள். இண்டக்ஷன் ஸ்டவ் கிடைத்ததில் குக்கர் வைத்து காய்,மசாலா வெட்டிப் போட்டாள். அரை மணி நேரத்தில் பத்து பேரும் சாப்பிட்டோம். எங்க வீட்டு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் மனிதர்கள் போலத்தான். அதற்கும் உயிர் உண்டு. அதனால் கத்தி,அரிவாள் இவற்றுடன் இதற்கும் ஆயுத பூஜை வழிபாடு நடத்துவோம். மிக்சிஜூசரில் எல்லோருக்கும் பழ ஜூஸ் போட்டு டிஸ்போசபிள் தம்ளரில் ஊற்றிக் கொடுத்தோம். வயிறார உணவு உண்டோம். அது எப்ப தெரியுமா?2004 ஆடி மாத கடைசி தேதியில்தான் இத்தனை நிகழ்வும் நடந்தது. அப்ப சுனாமி வந்த நேரம் அது. மதுரையிலிருந்து மடிப்பாக்கத்திற்கு மாற்றலான போதுதான் இவ்வளவு பிரச்னை! இந்த லட்சணத்துல ஆக்சாஃபிரேம் பயன்படுத்தி எனது அண்ணன்கள், தம்பி வெங்காயம் அறுத்துக்கொடுத்த கதை வேறு நடந்தது. நல்லவேளையாகக் கடை திறந்திருந்ததால் தயிர் கிடைத்தது. பயணக் களைப்பில் மோர் இதமாக இருந்தது. இந்த நிகழ்ச்சி நடந்தபிறகு நான் வீடு மாற்றுவது என்றால் முதலிலேயே ஒரு பையில் ஒரு குக்கர்,கத்தி,இன்டக்ஷன் ஸ்டவ்,பால்பாத்திரம்,நாலு தம்ளர்,தட்டுகள்,காய்கள்,பழங்கள் வைத்திருப்பேன். பயணச் செலவுக்குரிய பணமும் அதில் இருக்கும். மீதி பொருட்கள் வண்டியில் வந்தாலும் நாம் உள்ளே போனவுடன் உணவு தயாரிக்க இதுதான் உதவி செய்யும். நான் செய்வதைப் பார்த்து எனது பேரன்,பேத்திகளும் வீடு மாறிப்போகும் நேரத்தை எளிமையாக்கக் கற்றுக் கொண்டனர். உணவகத்தில் சாப்பிடுவது என்பது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது சகோதரிகளுக்குத் தெரியாததா! அப்படியும் விருப்பப்பட்டவர்கள் இளைஞர்களாக இருப்பவர்கள் உணவகத்தில்தான் உண்டனர். வயதானவர்களுக்கு உணவக உணவு சரிப்படாதில்லையா! அதுவும் இந்த ஆவின் பால்தான் சென்னைவாசிகளுக்கு அத்துபடி! அதுவும் இப்ப 3 வண்ணத்தில் வருகிறது. நான் சிறு வயதாக இருக்கும்போது புட்டியில் வரும். அதன் மூடியில் வெண்ணெய் இருக்கும். அதை அப்படியே கத்தியில் வழித்து பிரெட்டில் தடவி உண்டிருக்கிறோம். இப்போதெல்லாம் அதற்குத் தனியாக வெண்ணெய் வாங்க வேண்டிய காலமாக மாறி விட்டது. ஆவின்புட்டி மேலே வழித்த வெண்ணெய் கத்திகூட இப்ப என்னிடம் இருக்கிறது. எங்கள் நாய்க்குட்டியும் அதில் பங்கு கேட்டு என்னைச் சுற்றி வரும். அந்த கத்தியைக் கழுவ நிறைய சபீனா போடவேண்டும். அந்த அளவு அதில் கொழுப்பு இருக்கும். ஒரு முறை அந்த கத்தி கழுவும்போது எனது கையைப் பதம்பார்த்துவிட்டது. அதிலிருந்து கத்திக்கு நான் எப்போதும் ஒரு உறை வைத்திருப்பேன். என்ன உறை தெரியுமா! ஆயில் உறையைக் கிழித்து அதில் போட்டு வைத்திருப்பேன். மாதம் ஒரு முறை அதற்கு எண்ணெய் தடவி இன்றும் புதிதுபோல வைத்திருக்கிறேன். தோட்டத்திற்கென பத்துரூபாய் கத்தி வைத்திருப்பேன். காஸ் அடுப்பில் கத்தியைச் சூடு செய்து காய்கறித் தோட்டத்திற்கு தொட்டி தயார் செய்ய டப்பாக்களை வெட்டி வைப்பேன். கத்திகள் பலவிதம்! இல்லையா சகோதரிகளே!
கருத்துகள்
கருத்துரையிடுக