இந்தியச் சுதந்திர தினம்-2022

செந்நீர் கலந்த மண்ணில்

இன்று  மதச் சாக்கடைகளைச்

சுத்தம் செய்ய ஆளின்றி இருப்பதை

வெள்ளைப்புறாக்கள் வேதனையுடன்

 பார்த்தபடி கண்ணீர் வடிக்கின்றன!

காந்தி படத்தை

மௌனமாக பார்த்தபடி

பட்டொளி வீசுகின்ற

சுதந்திரக் கொடிக்கு

மூவண்ண பலூன்கள் உயரப்

பறந்தபடி வீர வணக்கம்

செய்கின்றன!

எங்கள் நாட்டில் ஆயிரம்

மதங்கள் இருந்தாலும்

அன்னியர் வரவை

விரும்போம் என்றபடி

உயர வளர்ந்த

 வேம்பு ஆல் அரச மரங்கள்

கைகோர்த்தபடி

75 ஆவது சுதந்திர நாளை

மகிழ்வுடன் கொண்டாடுகின்றன!






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

https://storymirror.com/read/poem/tamil/oim2m0hc/pukaiyillaa-pooki/detail