ஹலோ! அடிப்படை வசதி வேண்டாமாங்க!

ஹலோ! அடிப்படை வசதி வேண்டாமாங்க!

 சென்னையில் தமிழகத்தின் தலைநகரமான நடுநாயகமான எக்மோர் ரயில் நிலையம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் அந்த இடத்தில் தண்ணீர் வசதி குடிப்பதற்கு தாராளமாக இருக்கிறது இருப்பினும், ஒரு சில குறைகள் திருத்தவே முடியாததாய் விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக தோன்றுகிறது. இரவு 12 மணிக்கு மேல் எல்லா கடைகளும் பூட்டப்பட்டு விடுகின்றன. சாப்பாடு கூட கிடைப்பதில்லை.

 அதுபோல பதிவு செய்யப்படும் கவுண்டர்களும் மூடப்பட்டு விடுகின்றன. இதனால், மக்கள் தூங்குவதற்கு இடம் தேடி அலைகின்றனர். இருக்கும் அறைகளும் டிக்கெட் எடுத்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது இப்படி இருக்கையில் நேற்று வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த பல மக்கள் குடும்ப சுற்றுலாவாக வந்தனரோ என்னவோ தெரியவில்லை….. .தாய்ப்பால் ஊட்டும் அறை என்று இருந்தாலும் அந்த அறையில் சோஃபா பிசுக் பிசுக் என இருந்த. பயன்படுத்திய டயப்பர்  ஒரு மூலையில் கிடந்த். கிளவுஸ் ஒன்று பயன்படுத்திய நிலையில் அங்கே கிடந்தன. மக்கள் அந்த அறை பக்கம் செல்லவேயில்லை.

இரண்டாம் வகுப்பு காத்திருப்பு அறையில் மக்கள் கூட்டம் அளவாகவே இருந்தது. ஒரு முறை காவல்துறை வளர்க்கும் நாய்கள் படுத்துக் கிடந்தன. யாரும் படுக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பித்தனர். நேற்று அவ்வாறு யாரும் வரவில்லை.

 மாணவர்கள் காலையில் குளிரூட்டப்பட்ட அறையில் தங்கி இருப்பார்கள்.சில வாரங்களுக்கு முன் மாடியில் உள்ள அறையில் காட்டப்படும் படங்கள் மொழி தெரியாமலேயே பையன் தேர்ந்தெடுத்து காட்டினான். உள்ளே என்ன மாயங்கள் நடக்கிறது என ஒன்றுமே புரியவில்லை.

மேலும் ஒரு மணி நேரத்திற்கு என பணம் வசூலிக்கின்றனர். சுத்தமேயில்லாத கழிவறைகள்,ஓடாத எக்சாஸ்ட் ஃபேன்  தலைநகரா இது என எண்ண வைத்த எக்மோர் ரயில்நிலையம் மீது கேஸ் போட்டால் என்ன?

மேலே காவல்துறைக்கு உரிய அறைகள் பூட்டப்பட்டு கிடந்தன. பெய்த மழை நீரை சின்டெக்ஸ் டிரம்மில் பிடித்து வைத்த காட்சி மலைக்க வைத்த காட்சி வித்தியாசமாக இருந்தன.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

https://storymirror.com/read/poem/tamil/oim2m0hc/pukaiyillaa-pooki/detail