இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
                                           சரஸ்வதி பூஜை ஆறறிவு உயிர் படைத்த இறைவனே! இதயம் காக்கும் இதமான பாடலால் ஈன்றவள் வாழ்த்திட உலகம் சமாதனமாக நோயின்றி வாழ ஊர் முழுக்க பசுமை செழிக்க ஐங்கரன் காப்பானோ! விழியெல்லாம் அடுத்த மழை சாரலை பயத்துடன் நோக்கியபடி ஒவ்வொரு உயிரும் வயிறுக்காக போராட்டம்!  துப்பார்க்குத் துப்பாய குறளின் பொருளை முழுமையாக உணர்ந்தோர் சரஸ்வதியின் அருளைப் பெறுவாரே!
 
                                                            இதழியல் பாடம் இதழியல் படிப்பவர்கள் என்ன சம்பாதிக்க முடியும் என நினைப்பார்கள். ஆனால் அதில் சம்பாதிக்க முடியாதவர்களே கிடையாது. பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள்,வானொலி,ஆப்கள் இவைதான் இன்றைய பேசும் பாடுபொருள்.  அதைக்கற்பதுதான் இதழியல். அன்று ஆங்கிலேயர் ஓட்டம் பிடித்ததற்கே இந்த பேனாதான் காரணம். 

விழிப்புணர்வு தேவை!

வாணி மின்னிதழ்-அக்டோபர்2024 வாணி மின்னிதழ் ஆரம்பித்து 10 வருடங்களைக் கடந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக சென்னையில் காவல்துறை சார்பில் இயங்கி வரும் மியூசியத்தில் எடுக்கப்பட்ட காட்சி இது. எல்லோரும் பார்க்கவேண்டிய செய்திகள் இது. பண்டிகைக்காலங்களில் கீழே கிடக்கும் பொருட்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம். நமக்குத் தெரியாத புத்தகங்களில்கூட அது இருக்கலாம். இது போன்ற பல நல்ல செய்திகளை தமிழ்நாட்டுக்காவல்துறைப் பெண்கள் தருகிறார்கள். கத்தியுடன் நிறைந்த இருக்கையைப் பார்க்கும்போது வாஸ்து குறைபாடு என்றேன் நான். அக்காவல்துறைப்பெண் மகளோ எத்தனை ரத்தம் பார்த்திருக்கிறதோ என்றார். புத்தபெருமானை அந்த நேரம் நான் உணர்ந்தேன். அசோகச் சக்கரவர்த்தியே அங்குதான் இருக்கிறாரோ!  

ஹலோ! அடிப்படை வசதி வேண்டாமாங்க!

ஹலோ ! அடிப்படை வசதி வேண்டாமா ங்க!   சென்னையில் தமிழகத்தின் தலைநகரமான நடுநாயகமான எக்மோர் ரயில் நிலையம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் அந்த இடத்தில் தண்ணீர் வசதி குடிப்பதற்கு தாராளமாக இருக்கிறது இருப்பினும் , ஒரு சில குறைகள் திருத்தவே முடியாததாய் விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக தோன்றுகிறது . இரவு 12 மணிக்கு மேல் எல்லா கடைகளும் பூட்டப்பட்டு விடுகின்றன . சாப்பாடு கூ ட கிடைப்பதில்லை .   அதுபோல பதிவு செய்யப்படும் கவுண்டர்களும் மூடப்பட்டு விடுகின்றன . இதனால் , மக்கள் தூங்குவதற்கு இடம் தேடி அலைகின்றனர் . இருக்கும் அறைகளும் டிக்கெட் எடுத்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது இப்படி இருக்கையில் நேற்று வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த பல மக்கள் குடும்ப சுற்றுலாவாக வந்தனரோ என்னவோ தெரியவில்லை ….. . தாய்ப்பால் ஊட்டும் அறை என்று இருந்தாலும் அந்த அறையில் சோஃபா பிசுக் பிசுக் என இருந்த. பயன்படுத்திய டயப்பர்   ஒரு மூலையில் கிடந்த். கிளவுஸ் ஒன்று பயன்படுத்திய நிலையில் அங்கே கிடந்தன. மக்கள் அந்த அறை பக்கம் செல்லவேயில்லை. இரண்டாம் வகுப்பு காத்திருப்பு அறையில் மக்கள் ...

திரௌபதி

                        திரௌபதி என்னவென்று நினைத்து என்னை நீ படைத்தாயோ வியாச பெருமானே! பாரதப்போருக்கே காரணமாய் பாரெங்கும் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் கடந்தும் பேசப்படுகின்ற பாடுபொருளாய் என்னை ஏன் படைத்தாயோ! பெண்ணென்று புவிதனில் உதித்தபோதே உனது மனதில் எழுந்த கற்பனையில் எனக்கு ஐந்து கணவர்களை உருவாக்கியதால் உனக்கென்ன மனமகிழ்ச்சி! ஐவரோடும் மகிழ்வோடு மேற்கத்திய பாணி குடும்பம் நடத்தும் கலையை உலகிற்கு கற்றுக் கொடுக்கவே கற்பனைப் பாத்திரமாய் என்னை நீ படைத்தாயோ! ஆணின் விகாரமனம் உனக்கும் உண்டு என்பதை உறுதி செய்கிறாயா வியாச பெருமானே!   கற்பனா பாத்திரம்தான் என்றாலும் துச்சாதனன் வரலாறு இன்றும் பல இடங்களில் தொடர்வது உன்னால்தானன்றோ! பணிச் சுமையினால்   பாரதிதாசனின் குடும்பவிளக்குப் பெண்கள் ஆறடி கூந்தலை அரையடியாக்கி குழந்தைப் படிப்பிற்காக ஓடும்போது இன்னமும் பெண் ஏன் துச்சாதனனிடமும் துரியோதனிடமும் மன்றாடவேண்டும்! மானம் காக்க இதிகாசத்தினில் வேண்டுமானால் வண்ணவண்ணமாக...
 வாணி மின்னிதழ்   தூதுவளை தொக்கு சளி தொந்தரவுகளால் பெரியவர் முதல் குழந்தைகள்வரை அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு நிறைய பேருக்கு சளி நிரந்தரமாக இருக்கிறது. அவர்களுக்கான குறிப்புதான் இது. தூதுவளை இலை ஒரு பிடி கறிவேப்பிலை ஒரு பிடி சிறிய வெங்காயம் இருபது தேங்காய் துருவல் ஒரு பிடி உளுந்து ஒரு தேக்கரண்டி இஞ்சி ஒரு துண்டு பூண்டு 2 பல் நெல்லிக்காய் ஒன்று வதக்க எண்ணெய் சிறிதளவு எல்லாவற்றையும் நன்றாக கழுவி வதக்கவும். உளுந்தை சிவக்க வருமாறு வறுத்தெடுத்து அதனுடன் சேர்க்கவும். நன்றாக வதங்கியபின் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பெருங்காயத்தூள்,மிளகுப்பொடி போட்டு தாளித்து மிக்சியில் அரைத்த விழுதைக் கொட்டி   கட்டியானவுடன் இறக்கவும். சப்பாத்தி,பூரி,இட்லி,தோசை போன்றவற்றிற்கு ஏற்றது.