ஹலோ! ஹலோ! சுகமா இருக்கீங்களா...
வாசகர்களுக்கு வணக்கம்,
தமிழ் புத்தாண்டிற்கு ஒன்றும் விசேஷம் இல்லையா! எனக் கேட்பது புரிகிறது.
வேம்பின் வாசனையில் ஒவ்வொரு வீட்டிலும் மணக்க மணக்க அறுசுவையுடன் மகிழ்ச்சி கலந்த உணவுவகைள் உண்டு களித்திருக்கும்போது மின்னிதழில் எதற்கு பரிமாற்றம் என்றே தோன்றியது. பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பாக அனைத்துக்கோவில்களிலும் நடந்தேறியது. அரசியலில் ஆயிரத்தெட்டு மாறுதல்கள் வந்தாலும் அரசியலே எழுதாத மின்னிதழ் என்ற பெருமையை வாணி மின்னிதழ் நிலைநாட்டி வருகிறது. காரணம் என்னை எனது பெற்றோர் படித்த படிப்பிற்கு அரசியலில் காமராசர்போல வரலாம் என்றனர். ஆனால் எனது கணவரோ அது சரிவராது என 2010இல் நிராகரித்து விட்டார். காரணம் பெண்களின் நிலை அரசியலில் இன்னமும் ஒரு நிரந்தர மரியாதையை அடையமுடியவில்லை. குழந்தைகளுக்கென பல பக்கங்களை ஒதுக்கி வரும் இம்மின்னிதழ் ஆன்மிகம்,சமையல்,பசுமை,கவிதை, தொடர்கதை என பிரித்து இயங்கி வருகிறது. மின்மினி கதை என்னாச்சு தெரியுமா எனக் கேட்பது புரிகிறது. அது வரும்.....வரும்..........
கருத்துகள்
கருத்துரையிடுக