என்று ஒழியும் மது?
நகர்வலம்
எழுத்தாளர் என்றால் வீட்டினுள் இருந்து எழுத முடியுமா என்ன? வயது ஏற ஏற அனுபவங்கள் கடல்நுரைபோல நம்மைத் தொட்டுச் செல்லும்போது பல சிந்தனைகளை எடுத்துச் செல்லும் களமாக மின்னிதழ் இருக்கிறது.
சில வேலைகளின் பொருட்டு நேற்று மெல்ல பஸ்சில் சென்றேன். வழி நெடுக விடுமுறை நாளின் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியின் விளிம்பைத் தொட்டுப் பார்க்கத்துடித்துக்கொண்டிருந்தது. வழக்கம்போல போதையின் உச்சத்தைத் தொட்ட முப்பது வயது இளைஞன் பஸ்ஸ்டேண்ட் வளாகத்தை திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருந்தான். நல்லவேளையாக உடலில் முழுமையாகத் துணி இருந்தது. சில நேரங்களில் நான் பயணித்த நாட்களில் அது கூட இல்லாத நிலை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நினைப்பேன். ஏனிந்த மது மனிதனை நிலைகுலைய வைக்கிறது? உயிரைக் குடிக்க வைக்கும் மது நமது நாட்டிற்குத் தேவையா என்று............. மக்கள் நலனே பெரிது என அரசு ஆட்சி செய்யும் இடத்தில் இறைவன் குடி இருப்பான் என தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இயம்பிக்கொண்டிருக்கையில் தினமும் இக்காட்சியை எத்தனை ஆண்டுகள் பார்த்துக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறதோ என நினைத்தேன். அந்த கண்டக்டர் அக்குடிகாரனைப் பிடி்த்து வெளியே தள்ளி விட்டு கதவை மூடி விட்டார். பஸ் நகர்ந்தது. ஆனால் நாளை அந்த கண்டக்டர் அதே வழிபாதையில் செல்லும்போது அந்த குடிகாரனால் அவருக்கு தொல்லைகள் ஏற்படுத்தலாம். இதை கண்டக்டரும் உணர்ந்துதான் இருப்பார். இருந்தும் பஸ்சில் இருக்கின்ற பாசஞ்சர்சின் நலம் கருதி அவர் அவ்வாறு செய்தார். எல்லா பஸ்சிலும் காமெரா கிடையாது. இப்படி இருந்தால் எப்படி என்று புரியாமலே வீடு வந்து சேர்ந்தேன்.
மனம் பின்னோக்கிச் சென்றது. ஆசிரியாக இருந்தபோது குடியினால் இறந்த இரண்டு மாணவர்களை நினைத்தது. ஒவ்வொரு முறையும் மடிப்பாக்கம் செல்லும்போதெல்லாம் ஐயப்பன் கோவில் செல்வேன். அருகில் உள்ள குளத்தையும் பார்ப்பேன். நீங்க இங்கேயே இருந்திருக்கலாமே! என அந்தக் குழந்தைகள் சொல்வதுபோலத் தோன்றும். ஆம்! ஒவ்வொரு தனியார் பள்ளி ஆசிரியர்களும் வருடத்திற்கு ஒருமுறை மாறும்போது மாணவனின் நிலைகளைக் கண்காணிக்க முடிவதில்லை. பாலியல் வன்முறைகள்,பாலியல் படங்கள் மிகுந்த இக்காலத்தில் பெற்றோர்கள் ஃபீஸ் கட்ட உடலுழைப்பைத் தரும்போது அவர்களை எட்டுமணிநேரமும் பள்ளி முழுமையாகக் கண்காணிக்க ரெகார்டுகளைப் பதிவு செய்வதில்லை. பெரிய பள்ளிகளில் மட்டுமே ஏதோ சில உள்ளன. அவ்வளவுதான்!
ஒரு மனிதன் முழுமையடையச் செய்வது பள்ளிக்கல்விதான். இதை யார் உணர வேண்டும். வரப்புயர நெல் உயரும்..........?!
கருத்துகள்
கருத்துரையிடுக