பயணம்

சென்னையில் பஸ்சில் பல வருடங்களாக பயணம் செய்கிறேன். முதலில் பஸ் பயணம் ஒத்துக்கொள்ளாது. வெறும் வயிற்றில் பயணம் செய்து வீட்டிற்கு வந்தபின்தான் உணவு உண்பேன். பயணத்தில் வழி தெரியவில்லையென்றால் டிராவல் செய்யும் பயணிகளிடம் கேட்பேன். இறங்கும் இடத்தில் இருக்கும் பஸ் உதவி மையத்திடம் கேட்டுச் செல்வேன். ஆனால் இந்த கொரானா காலத்திற்குப் பிறகு யாரிடமும் கேட்பதற்குக்கூட இனி பெண்களுக்குத் தயக்கமாகத்தான் இருக்கும்.

அடையாறுவரை செல்லவேண்டி இருந்ததால் கிண்டியிலிருந்து பயணம் செய்தேன். நடத்துநர் அவருக்குரிய சீட் காலியாக இருந்தும் பயணிகள் இருக்கை காலியாக இருந்ததால் அமர்ந்திருந்தார். ஒரு பெண் சின்னமலை ஸ்டாப்பிங்கிற்கு வழி கேட்டும் அவர் சைதாப்பேட்டை ஸ்டாப் வரும்போது சொல்லிவிடவே அந்தப்பெண் அவ்வளவுதூரம் நடக்கவேண்டுமா என முணுமுணுத்தபடி ஓசியிலா டிராவல் பண்றேன்..காசு கொடுத்துத்தானே வர்றேன் என்றபடி இறங்கிச் சென்றார். அவர் இறங்கியபின் நடத்துநர்(கண்டக்டர்)அசிங்கமான வார்த்தையால் அந்தப்பெண்ணைத் திட்டினார். இது என்னைப்போன்ற பெண்கள் வெளியே வருவதற்கே யோசிக்க வைக்கிறது. யாரிடமும் பேசவும் அச்சப்பட வைத்த சமுதாய நிலையை யாரிடம் சொல்வது என்று புரியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

https://storymirror.com/read/poem/tamil/oim2m0hc/pukaiyillaa-pooki/detail