குழந்தைகள் இன்று ஆங்கில வழியில் படிப்பதால் பொருள் ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரிகிறது. அதுவும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு குறளுக்கும் கதை சொல்லி நடத்தத் தெரிவது கிடையாது. அதனால் ஆசிரியர்களுக்குப் பயன் தரும்வகையில் திருக்குறள் அமைக்கப்பட்டுள்ளது.
திருக்குறள் வகுப்பு-2022
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: பொறையுடைமை / The Possession of Patience,
Forbearance
அகழ்வாரைத்
தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப்
பொறுத்தல் தலை.
v
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி
தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப்
பொறுப்பது முதன்மை பண்பாகும்.
As earth bears up the
men who delve into her breast,
To bear
with scornful men of virtues is the best.
*To bear with those who revile us, just as the
earth bears up those who dig it, is the first of virtues.
152:
பொறுத்தல்
இறப்பினை என்றும் அதனை
மறத்தல்
அதனினும் நன்று.
v
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும்
பொறுக்க வேண்டும்; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது
பொறுத்தலையும் விட நல்லது.
Forgiving trespasses
is good always;
Forgetting
them hath even higher praise;.
*Bear with reproach
even when you can retaliate; but to forget it will be still better than that.
153:
இன்மையுள்
இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை
மடவார்ப் பொறை.
v
வறுமையுள் வறுமை, விருந்தினரைப்
போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு
செய்தலைப் பொறுத்தலாகும்.
The sorest poverty is
bidding guest unfed depart;
The
mightiest might to bear with men of foolish heart.
*To neglect
hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.
154:
நிறையுடைமை
நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி
யொழுகப் படும்.
v சான்றாண்மை
நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.
Seek'st thou honour
never tarnished to retain;
So must
thou patience, guarding evermore, maintain
*If you desire that
greatness should never leave, you preserve in your conduct the exercise of
patience
155:
ஒறுத்தாரை
ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப்
பொன்போற் பொதிந்து.
v தனக்குத் தீமை
செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக்
கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.
Who wreak their wrath
as worthless are despised;
Who
patiently forbear as gold are prized.
*(The wise) will not
at all esteem the resentful. They will esteem the patient just as the gold
which they lay up with care.
156:
ஒறுத்தார்க்கு
ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந்
துணையும் புகழ்.
v தமக்குத் தீங்கு செய்தவரைத்
தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும்
வரை புகழ் இருக்கும்.
Who wreak their wrath
have pleasure for a day;
Who bear
have praise till earth shall pass away.
*The pleasure of the
resentful continues for a day. The praise of the patient will continue until
(the final destruction of) the world.
157:
திறனல்ல
தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல
செய்யாமை நன்று.
v
கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது
நல்லது.
Though others work
thee ill, thus shalt thou blessing reap;
Grieve
for their sin, thyself from vicious action keep!.
*Though others inflict
injuries on you, yet compassionating the evil (that will come upon them) it
will be well not to do them anything contrary to virtue.
158:
மிகுதியான்
மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான்
வென்று விடல்.
v
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால்
பொறுத்து வென்று விட வேண்டும்.
With overweening pride
when men with injuries assail,
By thine
own righteous dealing shalt thou mightily prevail.
* Let a man by patience overcome those who
through pride commit excesses.
159:
துறந்தாரின்
தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல்
நோற்கிற் பவர்.
v நெறி கடந்து தீய சொற்களால்
திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப்
போலத் தூயவர்.
They who transgressors' evil words
endure
With patience, are as stern
ascetics pure.
*Those who bear with
the uncourteous speech of the insolent are as pure as the ascetics.
160
உண்ணாது
நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல்
நோற்பாரின் பின்.
v உணவு உண்ணாமல்
நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு
அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
Though 'great' we deem
the men that fast and suffer pain,
Who
others' bitter words endure, the foremost place obtain.
*Those who endure
abstinence from food are great, next to those who endure the uncourteous speech
of others.
கருத்துகள்
கருத்துரையிடுக